நெல் சாகுபடியில் விதை நேர்த்தி ஒரு முக்கியமான அம்சமாகும். விதைகளை விதைப்பதற்கு முன் பூச்சி (அல்லது) பூஞ்சாணக்கொல்லிகள் (அல்லது) உயிர் உரங்கள் கலந்து விதைப்பதே விதை நேர்த்தி. விதைகளை பூச்சி மற்றும் நோய்களிடம் இருந்து முன்கூட்டியே பாதுகாப்பதற்கு விதை நேர்த்தி முறை பயன்படுத்தப்படுகிறது. மேலும் விதைகளை உயிர் உரங்களுடன் கலந்து விதைப்பதன் மூலம் விதைகளின் முளைப்பு திறன் அதிகரிக்கிறது. பொதுவான விதை நேர்த்திக்கு ஒரு லிட்டர் நீரில் இரண்டு கிராம் கார்பண்டசிம் (அல்லது) டிரைசைக்லோசோல் மருந்து கலந்து விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் குறைந்தது 40 நாட்கள் வரை நாற்றங்காலில் குலை நோய் மற்றும் இதர பூஞ்சாண நோய்கள் தாக்காமல் பாதுகாக்கலாம். இயற்கை முறை சாகுபடியில் விதை நேர்த்தி செய்ய ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்த கரைசலில் ஒரு கிலோ விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் ஆரம்ப காலகட்டத்தில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். மேலும் உயிர் உரங்கள் ஏக்கருக்கு 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போ பாக்டீரியா மற்றும் 600 கிராம் அசோபாஸ் உரங்களை தேவையான நீரில் கரைந்து விதைகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விட்டு விதைப்பதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.