சம்பா பருவத்திற்கேற்ற நெல் இரகங்கள்

நெல் சாகுபடியில் ரக தேர்வு சம்பா பருவத்தில் பயிர் செய்ய சி ஆர் 1009, பாபட்லா (BPT), ஆடுதுறை 54 மற்றும் வெள்ளை பொன்னி நெல் ரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகளால் இந்த ராகங்களில் அதிக மகசூல் எடுக்க முடியவில்லை. மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய நெல் ரகங்களான ஆடுதுறை 54 மற்றும் ஆடுதுறை 58 நெல் ரகத்தை பாபட்லா (BPT), சி ஆர் 1009 மற்றும் வெள்ளை பொன்னி நெல் ரகங்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். கருப்பு கவுனி நெல் ரகத்திற்கு மாற்றாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட மேம்படுத்தப்பட்ட கவுனி என, அழைக்கப்படும் CO 57 நெல் ரகம் 125 முதல் 130 நாட்கள் வயதுடைய பாரம்பரிய நெல் ரகம் ஆகும். மேலும் வரக்கூடிய காலங்களில் நெல் சாகுபடிக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய புதிய நெல் ரகங்களை தேர்வு செய்து அதற்கான தொழில்நுட்பங்களை கையாண்டு நல்ல மகசூல் பெற வேண்டும்.

 

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.