நெல் சாகுபடியில் நெல் பயிர் தொண்டைக் கதிராக இருக்கும் பொழுது மகசூலை அதிகரிக்க TNAU நெல் ரீப் (3 கிலோ/ஏக்கர்) தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்த்து ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். முதல் தெளிப்பு செய்த 10 நாட்களுக்குப் பின் TNAU நெல் ரீப் 3 கிலோ/ஏக்கர் என்ற அளவில் இரண்டாம் முறையும் தெளிக்கலாம். இதனால் நெற்பயிரில் ஏற்படும் மலட்டுத் தன்மையை குறைத்து மணி பிடிக்கும் திறனை அதிகரிக்கும். வறட்சி மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கும் திறன் அதிகரிக்கும். விளைச்சல் 15 சதம் வரை கூடும். TNAU இந்த நெல் ரீப்பை https://www.tnauagricart.com என்ற இணையத்தளத்தில் மூன்று கிலோ பேக் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை ரூ. 425/ பேக் (3 கிலோ) தேவைப்படுவோர் https://www.tnauagricart.com என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளவும். டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.