ஆடுதுறை 58 நெல் ரகம் ஆடுதுறை 39க்கு சிறந்த மாற்று இரகம் ஆகும். ஆடுதுறை 39 மற்றும் கோனார்க் ரகத்தை பெற்றோர்களாக கொண்டது. 125 முதல் 130 நாட்கள்வயதுடையது. பின் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு ஏற்றது.
அதிக எண்ணிக்கையிலான கதிருள்ள தூர்கள், அடர்த்தியான அடித்தூர் சாயாத தன்மை போன்ற சிறப்பு பண்புகளை கொண்டது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 16.5 கிராம் கொண்ட நடுத்தர சன்ன அரிசி ஆகும். அரைவைத்திறன் (72%), முழு அரிசி காணும் திறன் (65%) ஆகும்.
குலை, செம்புள்ளி, இலைஉறை அழுகல் நோய்கள், இலைமடக்குப்புழு மற்றும் தண்டுத் துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத்திறன். ஒரு ஹெக்டேருக்கு 6100 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.