நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளலாம். அருகில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தேவைக்காக மாதிரி வைக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பில் தெளி விதைப்பு கருவி மற்றும் புழுதி விதைப்பு கருவி உள்ளது. இந்த கருவியை பயன்படுத்தி விதைக்கும் போது வரிசைக்கு வரிசை 20 சென்டிமீட்டர் இடைவெளி கிடைக்கும். நெல் விதைப்பு கருவிகளை பயன்படுத்தி விதைக்கும் போது விதைகள் மேலே காணப்படும். புழுதி விதைப்பு கருவியில் உள்ள கூடுதல் அமைப்பின் மூலம் விதைகள் மேலே தெரியாமல் மூடி விடுகிறது. விதைப்பு கருவி மூலம் விதைப்பதால் பயிர் எண்ணிக்கை பராமரிக்கபடுகிறது. திருந்திய நெல் சாகுபடியில் குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால நெல் ரகங்களுக்கு 20 X 20 சென்டிமீட்டர் (அல்லது) 22.5 X 22.5 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும். இந்த இடைவெளிகளை கடைபிடிப்பதன் மூலம் பயிர் எண்ணிக்கை சீராக பராமரிக்கப்படுகிறது.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.