ஆடுதுறை 54 நெல் ரகம் -மேம்படுத்த பொன்னி ரகம்

ஆடுதுறை 54 நெல் ரகம்  மேம்படுத்த பொன்னி ரகம் மற்றும் பன்ஸ்கக்தி ரகத்தை பெற்றோர்களாக கொண்டது.132 நாட்கள் வயதுடையது. பின் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு ஏற்றது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 16.5 கிராம் மற்றும்  வெள்ளை மத்திம சன்ன அரிசி ஆகும். அதிக அரைவைத்திறன் (72.3%),அதிக முழு அரிசி காணும் திறன் (63.1) கொண்டது.  அமைலோஸ் என்ற மாவுப்பொருள் இடைப்பட்ட அளவில் இருப்பதால் சமைப்பதற்கு மிகச்சிறந்தது. புகையான் மற்றும் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன். மற்றும் குலைநோய், இலையுறை அழுகல், கருகல் மற்றும் பழுப்பு புள்ளி நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. ஒரு ஹெக்டேருக்கு 6307 கிலோ வரை மகசூல் தரக்கூடியது

Content Files
Content Comments
1 Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags