ADT 54 நெல் தமிழ்நாட்டில் பிரபலமான நெல் ரகங்களில் ஒன்று. ADT 54 நெல் இரகமானது அதிக மகசூல் திறன், நல்ல தானிய தரம் மற்றும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகம். சன்னரக அரிசி, சம்பா பருத்திற்கேற்றது. வயது 130-135 நாட்கள். மகசூல் ஏக்கருக்கு 3461 கிலோ. வெடிப்பு மற்றும் பழுப்பு புள்ளி நோய்களுக்கு எதிர்ப்பு கொண்ட ரகம், களிமண், மணல் கலந்த களிமண் மற்றும் டெல்டா நிலங்களுக்கு ஏற்றது. மிதமான நீர் தேவை, பாசனம் மற்றும் மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது. திருமருகல் வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையத்திலும் ADT 54 நெல் இரகமானது இருப்பு உள்ளது என நாகப்பட்டின மாவட்ட திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.