டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள்

தற்போது சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரவிற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக விவசாபிகள் நெல் பயிருக்கு டி.ஏ.பி. யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களான அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட் (20:20:0:13) & சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள கந்தக சத்தானது தழை, மணி, சாம்பல் சத்துக்களை பயிர்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றி தருவதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது. சூப்பர் பாஸ்பேட் உரத்தின் மூலம் பயிர்களுக்கு கால்சியம் மற்றும் சல்பர் சத்து கூடுதலாக கிடைக்கிறது. மேலும், நீரில் கரையும் மணிச்சத்து கிடைப்பதால் பயிரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே விவசாயிகள் டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் கேட்டுகொள்ள்கிறார்.


 

Content Files
Content Comments
Likes 1 Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags