விதைப்பு (அல்லது) நடவு தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்

110 முதல் 115 நாட்கள் கொண்ட குறுகிய கால நெல் ரகங்களை வரிசைக்கு வரிசை 15 சென்டிமீட்டர் குத்துக்கு குத்து 10 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யும்போது ஒரு சதுர மீட்டரில் 60 குத்துகள் நடவு செய்யப்படும். மத்திய கால இரகங்கள் (அல்லது) சம்பா நெல் ரகங்களை வரிசைக்கு வரிசை 20 சென்டிமீட்டர் குத்துக்கு குத்து 10 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யும்போது ஒரு சதுர மீட்டரில் 50 குத்துகள் நடவு செய்யப்படும். 150 முதல் 155 நாட்கள் கொண்ட நீண்ட கால நெல் ரகங்களை வரிசைக்கு வரிசை 20 சென்டிமீட்டர் குத்துக்கு குத்து 15 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யும்போது ஒரு சதுர மீட்டரில் 33 குத்துகள் நடவு செய்யப்படும். நாற்றங்காலில் சிலிப்பு தண்ணீர் வைத்து விதைகளைத் தூவ வேண்டும். திருந்தி அமைக்கப்பட்ட செம்மை நெல் சாகுபடி முறையில் ஒரு குத்துக்கு இரண்டு நாற்றுகள் வரை வைத்து நடவு செய்யப்படுகிறது. சாதாரண நடவு முறையில் இரண்டு முதல் மூன்று நாற்றுகள் வரை வைத்து ஒரு குத்துக்கு நடவு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட 3 சென்டி மீட்டர் ஆழத்தில் நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் நாற்றுகள் எளிதில் உயிர் பெற்று அதிக தூர் வெடிக்கும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags