சூடோமோனாஸ் ஃப்ளூரசன்ஸ் ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா. பயிர்களில் தோன்றும் வேர் அழுகல், இலையுறை அழுகல், குலை நோய், வாடல் நோய், இலைப்புள்ளி மற்றும் இலைக்கருகல் போன்ற நோய்களை உண்டாக்கும் நோய்க்காரணிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. சூடோமோனாஸ் ஆக்சின்கள், சைட்டோகினின்கள் மற்றும் கிபெரெலின்கள் போன்ற தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்கிறது. விதைகளை விதை நேர்த்தி செய்ய 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதைகளை 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும். சூடோமோனாஸ் விதை நேர்த்தி நெல் பயிர் வளர்ச்சியை அதிகரிக்கவும், நோய் தாக்குதலை குறைக்கவும் மற்றும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||