திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து அதிக லாபம் பெறுவது

விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, நஞ்சுள்ள உணவு உற்பத்தியை மட்டும் தான் பெருக்க முடிகிறது. ஆனால் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு, அதிக மகசூல் கிடைக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குடுமியான்மலையில் திரவ உயிர் உர உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா, அசோபஸ் என 8 வகையான திரவ உயிர் உரங்கள், அனைத்து பயிர்களுக்கும் பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. உயிர் உரங்களை பயன்படுத்துவதால் இரசாயன உரங்களின் பயன்பாடு 20 முதல் 25 சதவீதம் வரை குறைவதோடு கூடுதல் லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. பயிர்களுக்கு வறட்சியை தாங்கி வளரும் சக்தி மற்றும் மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து நிகர லாபத்தை அதிகரித்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.