மக்காச்சோள சாகுபடியில் படைப்புழுக்களின் அந்துப்பூச்சிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பறந்து வெகுவேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடியது. இந்தப்பூச்சிகள் காற்றின் மூலம் பரவக்கூடியது. நமது இடத்தில படை புழுக்களின் தாக்குதல் இல்லாத நிலையிலும் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து காற்றின் மூலமாக இவைகள் பரவக்கூடும். எனவே காற்றின் திசையை வைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப்படைப்புழுக்களின் அந்தப்பூச்சிகள் பறந்து வருவதை தடுப்பதற்கு பொறிப்பயிர் அல்லது கவர்ச்சி/ வரப்பு பயிராக கம்பு, சோளம் விதைப்பு செய்யலாம் மற்றும் ஊடுபயிராக பாசிபயறு, உளுந்து, தட்டைப்பயறு, போன்ற பயறுவகை பயிர்களை பயிரிடவேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.