மழைக்காலத்தில் ஆட்டுக்குட்டிகள் பராமரிப்பு : உகந்த கொட்டகை அமைப்பு

மழைக்காலத்தில் ஆட்டுக்குட்டிகளின் உடல் வெப்பம், நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்படையும்போது, அவை பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. அதனால் மழைக்காலத்தில் சிறப்பு பராமரிப்பு உத்திகளை கையாள்வதன் மூலம் ஆட்டுக்குட்டிகளை பாதுகாக்க முடியும் .


• மழைக்காலத்தில் ஆட்டுக்குட்டிகளை அடைக்கும் கொட்டகை மழைச்சாரல் படாமலும், நீர் தேங்காத தரை அமைப்புடனும், பலத்த காற்றினால் பாதிப்பு ஏற்படாதவகையிலும் இருக்க வேண்டும்.
• மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக தீவனங்கள் கெட்டுவிடும். எனவே, தீவனங்களை ஈரம் படாத இடத்தில் வைத்து சுத்தமாக கையாள வேண்டும். ஆட்டுக்குட்டிகளுக்கு தினசரி சுத்தமான தண்ணீர் அளிக்க வேண்டும்.
• மழை காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக ஆட்டுக்குட்டிகளுக்கு கழிச்சல் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும். ஏதேனும், நோய் அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
• மழைக்காலத்தில் குளிராகவும், ஈரப்பதம் அதிகமாகவும் இருக்கும். ஈரமான சூழல் மற்றும் காற்றோட்டம் இல்லாமல் இருந்தால், கொட்டகையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சி அதிகரிக்கும். சீராக இருக்க கொட்டகையில் நன்கு காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் கட்டணமில்லா எண் 1800 419 8800 ஐ தொடர்பு கொள்ளவும்.


 


 

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags