கோழி இனங்கள் குறைந்த உள்ளீட்டு தொழில்நுட்ப பறவைகளாகவோ அல்லது திறந்தவெளி வளர்ப்பு அமைப்பில் பராமரிக்கப்படும் குறைந்த பட்சம் 1000 தாய் முட்டைக் கோழிகள் கொண்ட தாய் கோழி கொட்டகை (3000 சதுரடி பரப்பளவு) கிராமப்புற குஞ்சு பொறிப்பகம் (3000 சதுரடி பரப்பளவு) மற்றும் குஞ்சு பருவம் உடன் இணைந்த தாய்கோழி கொட்டகை (4000 சதுரடி பரப்பளவு) ஆகியவற்றை நிறுவ வேண்டும். திட்ட மதிப்பீடு ரூ.50 இலட்சம், மானியம் - ரூ.25 இலட்சம் ஆகும். தகுதியானவர்கள்- தகுதியான தனி நபர்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் குழுக்கள் (FPO), சுய உதவிக்குழுக்கள் SHG). தொழில் முனைவோருக்கான தகுதிகள்- தகுதியான நபர்கள்/ நிறுவனங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பயிற்சி பெற்ற நிபுணர்களை கொண்டிருக்க வேண்டும். வங்கி அல்லது NCDC போன்ற நிதி நிறுவனங்களால் திட்டத்திற்கான அனுமதிக் கடனைப் பெற்று வரையறுக்கப்பட்ட வங்கியிடமிருந்து உத்தரவாதத்தையும், அந்தக் கணக்கை வைத்திருக்கும் வங்கியால் செல்லுப்படியாக்கத்திற்கான மதிப்பீட்டையும் அளிக்க வேண்டும். திட்டம் நிறுவப்படும் இடத்தில் சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் இருக்க வேண்டும். KYC - க்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். தொழில் முனைவோர் திட்டத்திற்கான திட்ட ஒப்புதல் பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகாமை வரையறுக்கப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கும். வங்கிகளில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் மாநில அளவிலான செயற்குழுவின் (SLEC) மூலம் மத்திய அரசுக்கு (DADH) பரிந்துரை செய்யப்படும். + மத்திய அரசு (DADH) அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கான மானியத் தொகையை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) மூலம் பயனாளிகளுக்கு விடுவிக்கும். சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆதார் அட்டை/ பான்கார்டு / ஓட்டுநர் உரிமம், திட்டத்திற்கு நிலம் வைத்திருப்பதற்கான சான்று (உரிமம்/குத்தகை), கல்விச் சான்றிதழ் மற்றும் பயிற்சிச் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்தியதற்கான சான்று, கடந்த 6 மாதங்களுக்கான வங்கி அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை (மொத்த செலவு, தொடர் செலவு மற்றும் நிகர வருமானம் உட்பட திட்டம் செயல்படுத்தும் தளத்தின் புகைப்படம், கால்நடை பண்ணை தொடர்பான முன் அனுபவம், திட்டம் செயல்படுத்தும் தளத்தின் புவியியல் குறியீடு. விருப்பமுள்ள நபர்கள் https://www.nlm.udyamimitra.in/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நாகப்பட்டினம் மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் கட்டணமில்லா எண் 1800 419 8800 ஐ தொடர்பு கொள்ளவும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.