தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதை தொடர்ந்து அதிக மழை பெய்யவும், பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் நடவிலும் வளர்ச்சி பருவத்திலும் உள்ளது. சில பகுதிகளில் மழையினால் சம்பா இளநடவு பாதிக்கப்பட்டு பயிர்கள் களைந்து திட்டுதிட்டாக காலியாக ஆங்காங்கே காணப்படும். இதற்கு நாற்றுகள் கைவசம் இருந்தால் அதே இரகத்தைக்கொண்டு அல்லது இருக்கும் பயிரை களைத்து நடவு செய்ய பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். அதிக மழையின் காரணமாக பயிர்கள் பாதிப்படைந்து மஞ்சள் நிறமாக வாய்ப்புள்ளது. எனவே, அதிகப்படியான நீரை வடித்துவிட்டு, இளம் பயிர்களுக்கு ஒரு கிலோ ஜங்க் சல்பேட், இரண்டு கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டரில் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் மீது தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி குன்றிக்காணப்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து அக்கலவையுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இட வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.