மக்காச்சோளம் படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு லிட்டர் நீருக்கு தயோடிகார்ப் 2 கிராம் அல்லது அரை மி.லி ஸ்பினோடார்ம் அல்லது ஒரு மி.லி குளோரோடிரானிபுரோல் அல்லது 2 மில்லி நவளுரான் + இன்டோக்சாகார்ப் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இதனுடன் ஏக்கருக்கு அரை கிலோ வெல்லம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து டேங்க்கு 100 மில்லி என்ற அளவில் மருந்துடன் கலந்து குருத்துப் பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் படைப்புழு மருந்தை அதிகமாக உட்கொள்ளும் போது இறப்பு விகிதம் அதிகரிக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||