தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர்களை காப்பாற்றியாக வேண்டும் மூழ்கிய பயிரின் நீரை முதலில் விவசாயிகள் வடிகட்ட வேண்டும். இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் அதே இரக நாற்றுகளைக் கொண்டு நடவு செய்ய வேண்டும. தேங்கியுள்ள நீரை வடித்தவுடன் வரிசை நடவு மேற்கொண்ட வயல்களில் கோனோவீடர் அல்லது ரோட்டரி வீடர கருவி மூலம் மண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். நீர் வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சி சரியாக இல்லாத இடங்களில் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா. 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து இத்துடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் சீராக தூவ வேண்டும். இந்த உரங்களை இடும்பொழுது வயலில் சீராக தண்ணீர் வைத்துக்கொள்வதுடன் நீர் வெளியேறாதவாறு பராமரிக்க வேண்டும் மாவட்ட மயிலாடுதுறை ச.சுப்பையன் வேளாண்மை உதவி இயக்குநர் அவர்கள் தெரிவித்துக்கொள்கிறார்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.