விவசாயத்திற்கு மண்ணின் வளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக மண்ணின் வளம் குறைந்து வருவதால் விவசாயிகளால் சரியாக மகசூல் எடுக்க முடியவில்லை. ஆகவே, மண்ணின் தரத்தை அறிய விவசாயிகள் அனைவரும் மண் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மண் பரிசோதனையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள், அமில மற்றும் காரத்தன்மை போன்ற முக்கிய கூறுகள் உட்பட உங்கள் மண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும். இந்தாண்டு உலக மண் தினத்தில் கருப்பொருளான "மண்ணைப் பராமரித்தல்: அளவிடுதல், கண்காணித்தல், நிர்வகித்தல்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்ணின் வளப் பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை ரிலையன்ஸ் பவுண்டேசன் வழங்கி வருகிறது. மேலும் தகவலுக்கு, ரிலையன்ஸ் பவுண்டேசனின் கட்டணமில்லா உதவி எண்ணை 1800-4198800 ஐ தொடர்பு கொள்ளவும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.