தண்ணீர் தேங்கிய நிலையில் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் குறைந்துவிடும். மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் மணிச்சத்து, சாம்பல் சத்து, துத்தநாகம் மற்றும் தாமிர சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்து அவைகளின் பற்றாக்குறை உண்டாகும். இதனால் பயிர்களின் வளர்ச்சி தடைபடுகிறது. மேலும் மழைநீர் வடியும்போது நீருடன் மண்ணில் உள்ள தழைச்சத்து. மணிச்சத்து, சாம்பல் சத்து போரான் மற்றும் மாங்கனிசு சத்துக்களின் கரைத்திறன் அதிகமாகி தண்ணீரோடு கரைந்து வெளியேறிவிடும். வெள்ள நீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அமோனியா வடிவில் இட வேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 22 கிலோவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து, மறுநாள் அத்துடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.