நெல் சாகுபடியில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துதல்

 

நெற்பயிரில் புகையானானது தூர்களில் இருந்து சாற்றினை உறிஞ்சுவதால் தூர்கள் முற்றிலும் காய்ந்தது போன்று காணப்படும். இவ்வகை அறிகுறியானது வயல்களில் ஆங்காங்கே வட்டவட்டமாக காணப்படும். ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி இருக்கும் நிலையில் ஒரு தூருக்கு 2 புகையான் இருக்கலாம். சிலந்தி இல்லாத நிலையில் 1 தூருக்கு 1 புகையான் என்ற நிலையில் இருக்க வேண்டும். இதை கட்டுப்படுத்த தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதையும், தண்ணீர்பாய்ச்சுவதை தவிர்க்கவும். வயலில் நன்றாக நீர்வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும்.வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் பொருளாதார சேதநிலையை தாண்டும் போது ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட்17.8 சதவீதம் SL 50 மிலி அல்லது பைமெட்ரோசைன் 50 சதவீதம் WG - 120 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்து புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

 

 

 

 

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.