பஞ்சகாவ்யா செடிகளுக்கு இயற்கை வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா என்பது பல பயிர்களுக்கு பலமுறை சோதனை செய்து உறுதி செய்யப்பட்ட அளவீடு. இதை கூட்டவோ குறைக்கவோ கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் பயிருக்கு தெளிக்க வேண்டும். தெளிப்பு உரமாக பயன்படுத்தும்போது கண்டிப்பாக கரைசலை வடிகட்டிய பிறகுதான் தெளிப்பு செய்ய வேண்டும். விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது. முதலில் சொன்ன அளவீட்டில் விதை அல்லது நாற்றுகளை நனைத்து நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் விதைகளில் முளைப்புத் திறன் அதிகரிக்கும். நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும். இந்த பஞ்சகவ்யா, தழை, மணி, சாம்பல் சத்துக்களை பயிர்களுக்கு கொடுப்பதுடன், வளர்ச்சி ஊக்கியாகவும், நுண்ணூட்ட சத்துக்களை வேர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபியாகவும் இருக்கும். நன்றி
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.