நோய் பாதித்த இளம் செடிகள், வட்ட வடிவ பழுப்பு புள்ளிகளை முதல் இலைகளின் மேல் ஏற்படுத்தும். தணடு பகுதியில் பழுப்பு நிற புள்ளிகள் ஏற்பட்டு இளம் செடிகள் சுருங்கி தண்டு பகுதி காய்ந்து விடும். இது பரவி செடிகளை முற்றிலும் அழித்துவிடும். விதை மற்றும் மண் மூலம் இந்த நோய் பரவுகிறது. நோய் பாதித்த செடியின் மட்கிய பாகங்கள் மூலமாகவும், பூஞ்சாணம் பரவும். இதை தடுக்க நல்ல தரமான விதைகள் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். ஆழமாக விதைக்காமல் நிலத்தில் இருந்து குறைந்த ஆழத்தில் மட்டும் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன்பாகவே, விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் அளவில் டெபூகோநோசொல் என்ற பூஞ்சான மருந்தினாலோ அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் எதிர் உயிரியினாலோ நேர்த்தி செய்து விதைக்கலாம். பாதிக்கப்பட்ட வயலில் ஏக்கருக்கு 500 கிராம் காப்பர் ஹைட்ராக்ஸ்சைடு மணலுடன் கலந்து வயலில் இட்டு தண்ணீர் பாய்க்க வேண்டும். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் மான்கோசெப்+கார்பன்டசிம் என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்தினை வேர்ப்பகுதி மற்றும் தண்டுப்பகுதி படும்படி தெளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.