நெல் பயிரில் செம்புள்ளி நோய் தாக்குதல் பரவவாக தென்படுகின்றது. இந்நோய் நாற்றுப் பருவத்திலிருந்து நடவு வயலின் பால் பருவம் வரை இப்பூசணம் பயிரைத் தாக்கும். முதலில் இந்நோய் மிகச்சிறிய பழுப்புப் புள்ளிகளாகத் தோன்றும். பின் உருளை வட்ட வடிவப்புள்ளிகளாக மாறிவிடும். பின் பல புள்ளிகள் ஒன்று சேர்ந்த நிலையில் இலைகள் காய்ந்து விடும். இந்நோய் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் கதிர் மற்றும் கழுத்துப் பகுதியை தாக்கும். மேலும் தானியத்தரம் மற்றும் அதன் எடையும் குறையும். இதனை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் ஃபூளோரோசென்ஸ் என்ற மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் 1 கிலோவை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். தாக்குதல் அதிகமாக தென்பட்டால் மேன்கோசெப் + ட்ரைசைக்லசோல் கலந்த கலவை மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 3.0 கிராம் அல்லது மெட்டோமினோஸ்ட்ரோபின் 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.