நிலக்கடலை சாகுபடியில் புகையிலை வெட்டுப்புழு இலையின் பச்சையத்தைச் சுரண்டி சல்லடை போல் காணப்படும். இளம் புழுக்கள் பச்சை நிறத்தில் உடலின் மேற்பரப்பில் கருமைநிறக் கோடுகள் காணப்படும். வளர்ந்த புழுக்கள் இலைகள் அனைத்தையும் தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும். இப்புழுக்கள் பகல் நேரத்தில் மண்ணுக்கு அடியில் மறைந்து இருக்கும். மீண்டும் மாலை நேரங்களில் வெளிவந்து செடிகளை சேதப்படுத்துகின்றன. இதனை கட்டுப்படுத்த பொறிப் பயிராக ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி நடவு செய்தால் பெண் அந்துப்பூச்சி முட்டையை இலைகளின் மேற்புறத்தில் இடும். முட்டை குவியலையும் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம். மேலும், இரவு 7 மணி முதல் 11 மணி வரை விளக்குப் பொறி ஏக்கருக்கு ஒன்று அமைத்து அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம். பாதிப்பு பொருளாதார சேத நிலையைவிட அதிகமாகும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு 100 கிராம் இமாமெக்டின் பென்ஜொவேட் அல்லது இண்டக்சாகார்ப் 250 மில்லி பூச்சி மருந்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.