கோடை காலத்தில் கோ-3, கோ-4 போன்ற நீர்கோர்த்த புல் வகைகளை அளிக்க வேண்டும். மாடு மேய்ச்சலுக்கு காலை 10 மணிக்குள் சென்று வர வேண்டும். குளிர்ந்த நிலையில் உள்ள பகுதியில் மாட்டினை கட்ட வேண்டும். தண்ணீர் வைக்க வேண்டும். மாட்டின் எடையில் 10 ல் ஒரு பகுதி மாடுகளுக்கு தண்ணீர் தேவை உள்ளது. எனவே 300 கிலோ மாடு என்றால் ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் அந்த மாட்டிற்கு அளிக்க வேண்டும். தாது உப்புக்களையும் தினசரி கன்று குட்டிக்கு 5 கிராமில் ஆரம்பித்து பெரிய மாட்டிற்கு 30 கிராம் அளவிற்கு அளிக்க வேண்டும். பால்கறந்து சினையாக உள்ள மாட்டிற்கு ஒரு நாளைக்கு தாது உப்புக்கலவை 50 கிராம் அளவிற்கு கொடுக்கலாம்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.