வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலமாக உள்ளூர் வானிலையை தெரிந்து கொள்ளுங்கள். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவும். ஓ ஆர் எஸ் (ORS Powder) பவுடர், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களைப் பருகி நீரிழப்பைத் தவிர்க்கவும். வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியவும், கை விசிறிகளை இளைப்பாற உபயோகிக்கவும், கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் பாதுகாப்புடன் செல்லவும். குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுசெல்லக் கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||