பரன் மேல் ஆடு வளர்ப்பு தற்போது பலர் பின்பற்றும் புதிய முறையாக உள்ளது. இதன் முக்கிய நன்மை குறைந்த இடத்தில் ஆடுகளை பாதுகாப்பாக வளர்க்க முடிவதே. முன்பு ஆடுகளை பாதுகாக்க இரவில் பட்டிகள் அமைத்து காவல் காக்க வேண்டியிருந்தாலும், இந்த முறையில் அவசியமில்லை. மேலும், ஆடுகளின் மூத்திரம் மற்றும் புளுக்கை பரனின் கீழே சேமிக்கப்படுவதால், தரையில் வளர்ப்பது போல அசுத்தம் மற்றும் நோய் தாக்கம் ஏற்படாது. கீழே விழும் புளுக்கைகளில் கரையான் மற்றும் பிற பூச்சிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால், இதனை ஒருங்கிணைந்த விவசாய முறையில் கோழி மற்றும் சேவல் வளர்ப்புடன் இணைத்தால், அவை இப்பூச்சிகளைத் தின்று உணவாகக் கொள்வதுடன், கோழிகளுக்கும் உணவு கிடைக்கும். இதனால் ஆடுகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், வளர்ப்பவருக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.