ஈரமான தரையில் நீண்ட நேரம் மேயும் வெள்ளாடு, செம்மறியாடுகளுக்குக் கோமாரி நோய் (கால் குளம்பில் புண்கள்) ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு துளசி ஒருகைப்பிடி, பூண்டு 4 பற்கள், குப்பைமேனி ஒருகைப்பிடி, மஞ்சள்தூள் 10 கிராம் ஆகியவற்றை அரைத்து 100 மில்லி லிட்டர் நல்லெண்ணையில் வதக்கி, குளிர்ந்தவுடன் குளம்பில் தடவ வேண்டும். (உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்பைக் கழுவி, ஈரத்தை துடைத்து பின்னர் மருந்தைத் தடவ வேண்டும்.
கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி): ஆண்டுக்கு ஒரு முறை: முதல் தடுப்பூசி (2 மாத வயதில் நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராம கால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.)
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.