பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை


 


 பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவையான போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


மருந்து வாங்கியவுடன், அதன் லேபிளில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


மருந்து தெளிக்கும் தெளிப்பான் கருவிகளை பரிசோதித்து, கசிவுகள் இருந்தால் சரிசெய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.


மருந்து தெளிக்க பயிற்சி பெற்ற நபர்களையே பயன்படுத்த வேண்டும்.


மருந்து தெளிப்பவர் பாதுகாப்பு உடை, கை உறை, மூக்கு-வாய் முகமூடி, கண்ணாடி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும்.


மருந்து தெளிக்கும் இடத்தில் சுத்தமான நீர், சோப்பு மற்றும் துணி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.


இதனால் தவறுதலாக மருந்து கைகளிலோ உடலிலோ பட்டால் உடனே சுத்தம் செய்யலாம்.


பூச்சிக்கொல்லிகளை கையாள்வதற்கு வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்கள் ஆகியோரை அனுமதிக்கக் கூடாது.


மருந்துகளை அதற்குரிய அசல் டப்பாக்களில் அல்லது கலன்களில் வைத்திருக்க வேண்டும்.


வேறு கலன்களில் மாற்றி வைப்பது ஆபத்தானது.


காலியான டப்பாக்கள் மற்றும் கலன்களை நீர்நிலைகளிலும் வயல்களிலும் வீசவோ எரியவோ கூடாது.


அவற்றை வீட்டுப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது.


Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags