நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது கிராமப்புற மக்களுக்கு மிகவும் எளிதாக கூடுதல் வருமானம் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த தொழிலாகும். உயர் இன கோழிகளின் இறைச்சியை விட, நாட்டுக்கோழி இறைச்சி ருசி மற்றும் சத்துத்தன்மையால் அதிகமாக விரும்பி வாங்கப்படுகிறது.நாட்டுக்கோழிகளை வளர்ப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. நெரிசலான சூழலிலும் தாங்கி வளரும் திறன் உடையவை. அதிக வெப்பத்தையும் சமாளிக்கும் திறன் பெற்றவை. குறைந்த எண்ணிக்கையில் வளர்க்கும் போது சிறப்பு பராமரிப்பு தேவையில்லை. திறந்த வெளி அல்லது பண்ணை முறையில் எளிதாக வளர்க்கலாம்.நாட்டுக்கோழிகளை சிறந்த தொழில்நுட்ப முறைகளில் வளர்த்தால், இது மிகவும் இலாபகரமான தொழிலாக மாறும். இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு சுயவேலை வாய்ப்பு உருவாகி, வீட்டு பெண்களின் தினசரி வருமானம் அதிகரிக்கும்.அதனால், நாட்டுக்கோழி வளர்ப்பு நமது கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுகிறது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||