குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்துவாடிக் காய்ந்துவிடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணி பால் பிடிக்காமல் பதராகி வெண்கதிர்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது. இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும். முதிர்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிட்டு நடுவதனால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்துவிடலாம். விளக்குப்பொறியினை மாலை 6.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை ஒளிரவிட்டுக் குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்புச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். மேலும் அதிக அளவில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 ஜி 7.5 கிலோ மண்ணில் இடலாம். அல்லது குளோரான்டிரானிலிபுரோல் 24 எஸ்.சி 40 மி.லி., புளுபென்டையமைடு 39.45 ஈசி 30 மி.லி. இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தௌித்துக் கட்டுப்படுத்தலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.