விலை ஆதரவு திட்டத்தின் (MSP) கீழ் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (PSS) உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் கீழ் பயன்பெற உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது விவரங்களை அரசின் தளத்தில் முன்பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள், தங்களது விவசாயப் பொருட்களை சந்தை விலையை விட மத்திய அரசின் ஆதரவு விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே வழங்கினால் போதும். பதிவு செய்த அனைத்து விவசாயிகளும் அவசியமாக தங்களது பொருட்களை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. மத்திய அரசின் ஆதரவு விலை சந்தை விலையை விட அதிகமாக இருக்கும் நிலையில் வழங்கினால் போதும் என்பதனை தெளிவுபடுத்துகிறோம்.
உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலை : ரூ.78/கிலோ
முன்பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
1. ஆதார் கார்டு
2. வங்கி கணக்கு புத்தகம்
3. அடங்கல்
4. கம்ப்யூட்டர் பட்டா
5. மொபைல் எண்
முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள:
தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்
1/66J ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் மதுரை ரோடு விளாத்திகுளம் செல் : 6383387520 ரிலையன்ஸ் பவுண்டேசன் வழங்கிய இந்த தகவலை கேட்டமைக்கு நன்றி.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.