நானோ யூரியா குறித்த தகவல்

நானோ யூரியா என்பது திரவ வடிவில் உள்ள நைட்ரஜன் உரம் ஆகும். இதில் 4% நைட்ரஜன் உள்ளது. நானோ யூரியாவின் துகள்களின் அளவு சிறியதால் (2050 நானோமீட்டர்) பயிர்கள் அதை எளிதாகவும் வேகமாகவும் உறிஞ்சிக்கொள்ளும்.

சாதாரண யூரியாவுடன் ஒப்பிடும்போது, நானோ யூரியாவில் பயிர்களின் இலை பரப்பின் மீது அதிக எண்ணிக்கையில் அதிக துகள்கள் விழுவதால், உரத்தின் பயன் அதிகமாக கிடைக்கும். மேலும் நானோ யூரியா பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தை அளிக்கவும் ஒளிச்சேர்க்கை நடைபெறவும் வேர் வளர்ச்சிக்கும் மற்றும் பயிர்களில் கிளைகள் மற்றும் பெருக்கத்திற்கு உதவுகிறது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து இடுபொருள் செலவைக் குறைக்கிறது. இதனுடைய அதிகபட்ச உபயோகத்தினால் சாதாரண குருணை யூரியாவின் தேவையை குறைத்து மண், நீர் மற்றும் நிலம் மாசுபடாமல் பயிர்களுக்கு தழைச்சத்தினை அளிக்கிறது. நானோ யூரியாவை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 4 மி.லி கலந்து பயிர்களின் இலைகள் நனையும்படி காலை அல்லது மாலை நேரங்களில் பனி உலர்ந்த பின் தெளிக்கலாம்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags