ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் — “பழையது எப்போதும் தங்கம் அல்ல”. குறிப்பாக கடவுச்சொல் அல்லது பாஸ்வேர்ட்களுக்கு (Password) இது மிகவும் பொருந்தும்.
பழைய, மீண்டும் பயன்படுத்தப்படும் அல்லது பலவீனமான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவது உங்கள் வங்கி கணக்கு மற்றும் பிற ஆன்லைன் கணக்குகள் ஹேக் செய்யும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஏதேனும் தரவு கசிவு ஏற்பட்டால், சைபர் குற்றவாளிகள் உங்கள் பாஸ்வேர்ட்களை பயன்படுத்தி வங்கி, UPI மற்றும் பிற கணக்குகளில் நுழைய முயற்சிக்கலாம்.
எனவே,ஒவ்வொரு கணக்கிற்கும் வலுவான, நீளமான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்ட் பயன்படுத்துங்கள்.
ஒரே பாஸ்வேர்டை பல கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகமான செயல்பாடு அல்லது பாஸ்வேர்ட் மீறல் எச்சரிக்கை வந்தால், உடனடியாக உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள்.
உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க, இன்று பாஸ்வேர்ட் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். நன்றி.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.