நெற்பயிரில் இலைச் சிலந்தி தாக்குதல் தற்போது காணப்படுகிறது.
இளம் மற்றும் முதிர்ந்த இலைச் சிலந்திகள், நெல் இலைகளின் அடிப்பகுதியில் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சும். இதனால் இலையில் வெள்ளை நிற திட்டுகள் தோன்றி, பயிர் வெளிர் நிறமாக மாறி, ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.
இந்த தாக்குதல் அதிக வெப்பநிலை, தொடர் வறண்ட வானிலை, மற்றும் தொடர் நெல் சாகுபடி உள்ள சூழ்நிலையில் அதிகமாகும்.
இதனை கட்டுப்படுத்த,
மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
அறுவடைக்கு பின், மறுதுளிர் வருவதற்கு முன் உழவு செய்ய வேண்டும்.
தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில்
ஒரு லிட்டர் நீருக்கு நனையும் கந்தகம் 2.5 கிராம்
அல்லது பெனாஷாகுயின் 10 EC – 2 மில்லி
அல்லது ஸ்பைரோமெசிபென் 22.9 SC – 1.2 மில்லி
என்ற அளவில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம்.
மருந்து தெளிக்கும்போது, இலைகளின் அடிப்பகுதி நனையுமாறு தெளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.