நுண்ணூட்டச் சத்து இடுதல்

நுண்ணூட்டச் சத்து இடுதல் தமிழ்நாடு வேளாண் துறை உருவாக்கிய நுண்உரக் கலவையை 12.5 கிலோ மணலுடன் கலந்து மொத்த அளவு 50 கி / ஹெக்டர் அளிக்க வேண்டும். எக்டருக்கு 30 கிலோ தமிழ்நாடு நுண்ணூட்டக் கலவையை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்ணூட்டக்கலவை மற்றும் தொழுவுரத்தை கலக்க வேண்டும். தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைக்க வேண்டும்). (அல்லது) 5 கிலோ துத்தநாகம் + 40 கிலோ கந்தகம் + 1.5 கிலோ போரானை பற்றாக்குறை உள்ள மண்ணில் இட வேண்டும். துத்தநாக பற்றாக்குறை உள்ள மணலில் கலப்பின மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு 37.5 கி துத்தநாக சல்பேட் பரிந்துரைக்கப்படுகிறது. பார் முறை நடவில், கலவையை மூன்றில் இரண்டு பங்கு வரப்பு மேலயும், வாய்க்காலிலும் தூவ வேண்டும். பாத்தி முறை பின்பற்றும்பொழுது, குழித்து நுண்ணூட்டக் கலவையை இட வேண்டும். நுண்ணூட்டக் கலவையை மண்ணில் இணைக்க வேண்டாம்.
Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags