மக்காச்சோளத்தில் பருவ வாரியான நீர்ப்பாசன முறைகள்

நீர்ப்பாசன முறைகள் – மக்காச்சோளம் மக்காச்சோளத்தில் நீர்ப்பாசன எண்ணிக்கையும், நீர் வழங்கும் காலமும் மண் வகைக்கு ஏற்ப மாறுபடும். வண்டல் மண் நிலங்களில், முளைப்புப் பருவத்தில் 3 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைத்தவுடன், 4வது நாள் மற்றும் 12வது நாளில் உயிர் நீர் வழங்க வேண்டும். வளர்ச்சிப் பருவத்தில் 2 முறை, அதாவது 25வது மற்றும் 36வது நாட்களில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பூக்கும் பருவத்தில் 2 முறை, 48வது மற்றும் 60வது நாட்களில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். முதிர்ச்சிப் பருவத்தில் 2 முறை, 72வது மற்றும் 85வது நாட்களில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். இந்தப் பருவத்தில் தண்ணீரை கட்டுப்படுத்தி விட வேண்டும். செம்மண் நிலங்களில், முளைப்புப் பருவத்தில் 3 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைத்தவுடன், 4வது நாள் மற்றும் 12வது நாளில் உயிர் நீர் வழங்க வேண்டும். வளர்ச்சிப் பருவத்தில் 3 முறை, 22வது, 32வது மற்றும் 40வது நாட்களில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பூக்கும் பருவத்தில் 3 முறை, 50வது, 60வது மற்றும் 72வது நாட்களில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். முதிர்ச்சிப் பருவத்தில் 2 முறை, 85வது மற்றும் 95வது நாட்களில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். முதிர்ச்சிப் பருவத்தில் தண்ணீரை கட்டுப்படுத்தி விடுவது அவசியம்.
Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags