தக்காளியில் காய்ப்புழு மற்றும் புரொடீனியாப் புழுவைக் கட்டுப்பாடு
இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்கவேண்டும், வளர்ந்த புழுக்களையும் அழிக்கவேண்டும். ட்ரைகோகிம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50,000 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருளாதாரச் சேதநிலை அறிந்துவிடவேண்டும்.
காய்ப்புழுவிற்கு என்.பி.வி வைரஸ் கலவை தெளிக்கவேண்டும். புரொடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.