ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்கு உயா் விளைச்சல் திறன் கொண்ட நெல் ரகங்கள் பயிர் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. குறுகியகால நெல் ரகங்களான ஏ.டி.டீ-57, ஏ.டி.டீ-55, ஏ.டி.டீ-53, ஏ.டி.டீ-43, ஏ.டி.டீ-37, கோ-55, கோ-51, திருச்சி-5, டி.பி.எஸ்-5 (திருப்பதிசாரம்-5), ஏ.எஸ்.டி-16 ஆகிய 105 முதல் 115 நாட்கள் வயதுடைய நெல் ரகங்களை குறுவைக்கு பயிர் செய்யலாம். மேலும், ஏ.டி.டீ-57 & ஏ.டி.டீ-55 சன்ன ரகம், 115 நாட்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6000 -6500 கிலோ மகசூல் கிடைக்கும். ஏ.டி.டீ-55 பாக்டீரியா கருகல் நோய்க்கும், ஏ.டி.டீ-57 கருகல் நோய்க்கும் எதிா்ப்புத்திறன் கொண்டது. மேலும் தகவல் பெற ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 18004198800ஐ தொடர்பு கொள்ளவும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.