நெற்பயிரில் குலை நோய் பாதிக்கப்பட்ட பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள், தண்டு, கழுத்துப் பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும் கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 120 கிராம் டிரைசைக்ளோசோல் ( சிவிக் ) மருந்தினை 100 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் இலைகள் மற்றும் குருத்து பாகம் நனையும்படி தெளிக்க வேண்டும்
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||