நெல் சாகுபடியில் இலைசுருட்டு புழுக்கள் இலைகளை நீளவாக்கில் மடக்கி கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகள் வெண்மை நிறமாக மாறிவிடும். இதன் தாக்குதல் அதிகமாகும் போது நெல் வயல் முழுவதும் வெள்ளை நிறமாக மாறி காய்ந்தது போல் காட்சியளிக்கும். இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் அதிக தலைச்சத்து உரம் இடக்கூடாது. மேலும், ட்ரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் ஒட்டுண்ணி அட்டையை, ஒரு ஏக்கருக்கு 5 சிசி என்னும் அளவில் நாற்று நட்ட 37, 44 மற்றும் 51 ம் நாளில் வயலில் விடலாம். பாதிப்பு பொருளாதார சேத நிலையை விட அதிகமாகும் பட்சத்தில் இதனை கட்டுபடுத்திட ஒரு ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்.பி 400 கிராம் அல்லது புளுபெண்டியமைடு 39.35 எஸ்.சி 50 மிலி அல்லது இன்டாக்சாகார்ப் 15.8 ஈசி 200 மிலி மருந்தினில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் 200 லிட்டர் நீரில் கலந்து இலைகளின் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.