நெல் சாகுபடியில் இலைப்புள்ளி நோய் தாக்கத்தால் பயிரின் இலைகளின் மேல் மஞ்சள் மற்றும் சிகப்பு புள்ளிகள் நிறைய தோன்றும். இப்புள்ளிகள் அதிகமாக இருப்பின் இலையில் ஒளிசேர்க்கைக்கான பகுதி குறைவதால் ஒளிசேர்க்கை சரிவர நடைபெறாது. இந்த நோய் கிருமியானது பூ மற்றும் நெல்மணிகள் வரும்போது மஞ்சள் நிறங்களை தோற்றுவிப்பதால் நெல்லை உரிய விலைக்கு விற்கமுடியாது. மேலும் தானியத்தரம் மற்றும் அதன் எடையும் குறையும். இதனை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் ஃபூளோரோசென்ஸ் என்ற மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் 1 கிலோவை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். தாக்குதல் அதிகமாக தென்பட்டால் மேன்கோசெப் + ட்ரைசைக்லசோல் கலந்த கலவை மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 3.0 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.