வேளாண்மைத்துறையில் இருந்து விவசாயிகள் பயன் பெறும் வகையில் உழவன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உழவன் செயலியை வேளாண் பெருமக்கள் தங்களது ஆண்ட்ராய்டு செல் போனில் ப்ளே ஸ்டோரில் உழவன் செயலி என தேர்வு பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் விவசாயிகளது சுய விபரங்களை பதிவிட வேண்டும். இந்த உழவன் செயலியில் மானியத்திட்டங்கள், இடு பொருள் முன் பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரங்கள் வாடகை விபரம், சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், பயிர் சாகுபடி வழிகாட்டி, இயற்கை விவசாய விளைபொருட்கள், உழவர் உற்பத்தியாளர் பொருட்கள், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம், உழவன் இ-சந்தை, கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் பசுமை இயக்கம் மரக்கன்றுகள் பற்றிய அனைத்து தகவல்கலும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து விவசாய பெருமக்களும் தங்களது செல் போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன் அடைய வேண்டும் என வேளாண்மைத்துறை கேட்டுக்கொள்கிறது. மேலும், தகவல் பெற ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 1800 419 8800 ஐ தொடர்பு கொள்ளலாம்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.