மீன்பிடி விசைப்படகு/ நாட்டுப்படகுகளின் நடைமுறை செலவினங்களான டீசல், பனிக்கட்டி, கூலி மற்றும் இதர இனங்களுக்கு தேவையான கடன் உதவியை வங்கிகள் மூலம் பெறுவதற்கு மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டை பெரிதும் உதவுகிறது. கூண்டு மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு மற்றும் இதர மீன்வள திட்டங்களுக்கும் கடன் அளிக்கப்படுகிறது. மீனவர்கள் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே இந்த கடன் அட்டையை பெறலாம்.மத்திய அரசு உதவியுடன் குறைந்த வட்டியில் அதாவது 7 சதவீதம் வட்டியில் கடன் பெறுவது மீனவர்களுக்கு சாத்தியமாகிறது.கு றிப்பிட்ட காலக்கெடுவில் வங்கிக் கடன் செலுத்திடும் மீனவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மத்திய அரசு 2 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்கிறது. இதிய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி அடமானம் இல்லாமல் தற்போது ரூ.1,80,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. அடமானத்தின் பேரில் ரூ.3,00,000/- மீனவர் கடன் அட்டையில் (KCC) கடன் பெறலாம். தொடக்க மீனவர் கூட்டுறவு சங்கங்களின் கடன் பெறும் மீனவர்களின் குறிப்பிட்ட காலக்கெடுவில் கடன் செலுத்தும் மீனவர்களுக்கு 7 சதவீத வட்டியில் மத்திய அரசு பங்களிப்பு 3 சதவீதத்தோடு, ஊக்கதொகையாக 3 சதவீதம் தள்ளுபடி செய்து இறுதியாக 4 சதவீதம் (58 பைசாவில்) கிசான் அட்டையில் கடன் பெற்று மீனவர்கள் பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒருமுறை கிசான் கடன் அட்டை பெற்றவர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவணங்களை காண்பித்து கடனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். கிசான் கடன் அட்டை பெறும் மீனவர்கள் உயிர் காப்பீடு ரூ.330/-வருடம் மற்றும் விபத்து காப்பீடு ரூ.12/- வருடம் பிடித்தம் செய்யப்படும். மீனவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க (KCC) தேவையான ஆவணங்களான ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல், புகைப்படம், படகு உரிமைச்சான்று நகல், மீனவர் அடையாள அட்டை, உயிரி தொழில் நுட்ப அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்பெற1800 419 8800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.