தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மீனவர் நல வாரியம் உறுப்பினர்களின் மகன் மற்றும் மகளுக்கு கல்விக்கான உதவிதொகையில், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ1250/-, மாணவிகளுக்கு ரூ1500 -யும், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ1750/-, மாணவிகளுக்கு ரூ 2000-யும், வழங்க பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மீனவர் பதிவுசெய்யப்பட்ட அட்டை மற்றும் குடும்ப அட்டையுடன் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து தங்களுக்கு அருகிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவல் அறிய ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி எண் 1800 419 8800
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.