50 கிலோ தொழு உரம் (ஆடு அல்லது மாடுகளின் மட்கிய சாணம்) 5 கிலோ சூடோமோனாஸ் அல்லது அரை லிட்டர் திரவநிலை சூடோமோனாஸ் எடுத்து கொண்டு தொழு உரத்துடன் கலந்து, தண்ணீர் தெளித்து நிழலான பகுதியில் செய்தித்தாள் கொண்டு மூடி வைக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து 20 கிலோ வெப்பம் புண்ணாக்கு, அரை லிட்டர் ஹுமிக் அசிட் சேர்த்து, நன்றாக கலந்து 5 நாட்களுக்கு செய்தித்தாள் கொண்டு மூடி வைக்க வேண்டும். 12 நாட்கள் ஆனா ஊட்டமேற்றிய தொழு உரத்தை நெல் நடவுக்கு முன்போ அல்லது விதைக்கும் முன்போ நிலத்தில் இடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகி, நோய், பூச்சி மற்றும் பாசி பிரச்சனைகள் வராமல் தடுக்கும் மற்றும் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும்
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.