தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு ஏற்ற இரகங்களான ஆடுதுறை 36, ஆடுதுறை43, ஆடுதுறை 45, கோ 51, டிபிஎஸ் 5, ஆடுதுறை 53, ஏஎஸ்டி16, ஆடுதுறை 37 ஆகிய இரகங்களை சாதாரண முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 24 கிலோ, இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு 15 கிலோ நெல் விதைகள் போதுமானது. சூடோமோனாஸ் ஒரு கிலோ விதை நெல்லுக்கு 10 கிராம் வீதம் கலக்க வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்களை விதையுடன் கலந்து விதையை ஊற வைத்து நாற்றங்கால் அமைக்க வேண்டும் என தஞ்சை மாவட்டத்தின் வேளாண் இணை இயக்குநர் திரு.ந.க.நல்லமுத்துராஜா தெரிவித்துள்ளார்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.