மாடு சினை பிடிக்காததற்கு முக்கிய காரணங்களில் குடல்புழுவும் ஒன்று எனவே முதலில் மாடுகளுக்கு குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும், குடல்புழு நீக்கத்திற்கு பாதுகாப்பான மாத்திரைகளில் பானாகியூர் அல்லது பேண்டிகைண்ட் பிளஸ் என்ற மாத்திரைகளில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒரு நாள் கொடுக்க வேண்டும். இதனை கொடுத்த நான்கு நாட்களுக்கு பிறகு தினமும் இரண்டு கோழி முட்டைகள் வீதம் 15 நாட்களுக்கு ஓட்டுடன் மாட்டின் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். கலையில் கொடுத்தால் சீக்கிரம் செரித்து உடலுடன் சேரும். இந்த கோழிமுட்டையை கொடுக்கும்போதே பெஸ்ட்மின் கோல்டு என்ற சத்து பவுடர் வாங்கி தினமும் இரண்டு ஸ்பூன் தவிடு தண்ணீர் வைக்கும்போது அதில் கலந்து தொடர்ந்து வைத்து வரவும். இவ்வாறு கொடுக்கும்போது மாடு பருவத்திற்கு வரும் அந்த பருவத்தினை விட்டுவிட்டு அடுத்த பருவத்திற்கு வரும்போது சினை ஊசி போடும்போது மாடு சினை பிடிக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.