மக்காசோளத்தில் படைப்புழுவினை கட்டுப்படுத்தும் முறை 

மக்காசோள சாகுபடியில்  படைப்புழுவின் தாக்குதலை  கட்டுப்படுத்த குறுகிய கால மக்காச்சோள ரகங்களை பயிரிடுவது படைப்புழுவின் பாதிப்பில் இருந்து தவிர்க்க இயலும். வயலை சுற்றியும் களைகள் இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும். முட்டை ஒட்டுண்ணிகள் டிரைக்கோகிராம்மாஇ டிலினோமஸ் மற்றும் புழு ஒட்டுண்ணிகள் செலோனிஸ்இ கொடிசியா போன்றவையும் இப்புழுவின் பாதிப்பை குறைக்கவல்லவை. படைப்புழுவை உண்ணும் புள்ளிவண்டுகள் மற்றும்  தரைவண்டுகள் போன்றவைகளை கவர்ந்து இழுக்கும்  பூக்கும் பயிர்களை வயலில் பயிரிடுவதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளான பெவேரியா பேசியானா மெட்டாரைசியம் அனிசோபிலியே மற்றும் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.மேலும்   1 லிட்டர் நீருக்கு 4 மில்லி தலா வேப்ப எண்ணெய் மற்றும் புங்கம் எண்ணெய் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் முட்டைப் பருவத்திலேயே இதை தடுக்கலாம்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags