மக்காச்சோள சாகுபடியில் அமெரிக்கப்படைப்புழுவின் தாக்குதலில் இருந்து விடுபட ஒரு ஏக்கருக்கு 5 முதல் 20 இனக்கவர்ச்சி பொறிகளை வைப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.மேலும் மக்காச்சோளம் விதைத்த 15 முதல் 20ஆம் நாளில் ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி அசாடிராக்டின் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவேண்டும். புழுவின் தாக்குதல் அதிகம் இருந்தால் 10 லிட்டர் நீருக்கு 4 கிராம் இமாமெக்டின் அல்லது 20 கிராம் தயோடிகார்ப் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.மேலும் மக்காச்சோளம் விதைத்த 40 முதல் 45ஆம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 80 கிராம் மெட்டாரைசியம் கலந்து தெளிப்பு செய்யவேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.